எரிமலை                                    Volcano

Picture
volcano

சுழல்வடிவ எரிமலையின் குறுக்குவெட்டு தோற்றம் (நெடுகிடை அளவுகோல் பெரிதுபடுத்தப்பட்டுள்ளது) :

1. பெரிய மாக்மா அறை
2. அடிநிலப்பாறை
3. கால்வாய் (குழாய்)
4. அடித்தளம்
5. சில்
6. அகழி
7. எரிமலையால் உமிழப்படும் சாம்பல் அடுக்குகள்
8. பக்கவாட்டுப் பகுதி

9. எரிமலையால் உமிழப்படும் எரிமலைக்குழம்பு அடுக்குகள்
10. கழுத்துப்பகுதி
11. சுற்றுப்புறக் கூம்பு
12. எரிமலைக்குழம்பு ஓட்டம்
13. வெளியேறும் பகுதி
14. எரிமலைவாய்
15. சாம்பல் மேகம்

எரிமலை

Picture
எரிமலை (Volcano) எனப்படுவது புவியின் உட்புறத்திலுள்ள சூடானகற்குழம்புசாம்பல் வளிமங்கள் போன்றவை வெளியேறத்தக்க வகையில் புவி மேலோட்டில் உள்ள துவாரம் அல்லது வெடிப்பு ஆகும். மலைகள் அல்லது மலைகள் போன்ற அம்சங்களை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கும் மேலாக உருவாக்கும் விதமாக பாறைகளைவெளித்தள்ளும் நிகழ்வோடு எரிமலை நடவடிக்கை சம்பந்தப்பட்டுள்ளது. "வால்கனோ" (volcano) என்ற வார்த்தை இத்தாலிய மொழியிலிருந்து பெறப்பட்ட ரோமானியர்களின் நெருப்புக்கடவுளான வால்கன் என்பவரது பெயராகும்.


பொதுவாக டெக்டோனிக் அடுக்குகள் விலகுகின்ற அல்லது நெருங்குகின்ற இடத்தில் எரிமலைகள் காணப்படுகின்றன. ஒரு மத்திய-கடல் மலைமுகடு, உதாரணத்திற்கு மத்திய அட்லாண்டிக் மலைமுகடு, டெக்டோனிக் அடுக்குகள் விலகிச் சென்றதால் ஏற்பட்ட எரிமலைகளுக்கு உதாரணங்களாக உள்ளன; பசிபிக் நெருப்பு வட்டம் டெக்டோனிக் அடுக்குகள் நெருங்கிவந்து ஒன்று சேர்ந்ததற்கான உதாரணங்களாக உள்ளன. முரண்பாடாக, டெக்டோனிக் அடுக்குகள் ஒன்றின் மேல் ஒன்று சாய்ந்திருக்கும் நிலையில் வழக்கமாக எரிமலைகள் உருவாவதில்லை.பூமி ஓடு நீண்டுசெல்கின்ற அல்லது மெலிதடைகின்ற இடங்களிலும் எரிமலைகள் உருவாகின்றன ("இது வெப்பப் பகுதி அல்லாத இண்ட்ராபிளேட் எரிமலை நிகழ்வு" எனப்படுகிறது), அவை ஆப்ரிக்க ரிஃப்ட் பள்ளத்தாக்கில் உள்ள "வெல்ஸ்-கிரே கிளியர்வாட்டர் எரிமலைப் பகுதி", வட அமெரிக்காவில் உள்ள ரியோ கிராண்ட் ரிஃப்ட் மற்றும்ஐரோப்பாவில் ஈஃபிள் எரிமலைகளுடன் உள்ள ரைன் கிரெபன் பகுதி போன்றவை.


வெப்பப்பாறைகள் மேல்நோக்கி வருவதாலும் எரிமலைகள் உருவாகின்றன. இத்தகைய வெப்பப்பகுதிகள் எனப்படுபவை, உதாரணத்திற்கு ஹவாயில் உள்ளவை அடுக்கு எல்லையின் அப்பாலிருந்து உருவாகக்கூடியவை. வெப்பப்பகுதி எரிமலைகள்சூரியமண்டலத்திl உள்ள அனைத்திலும் காணப்படுகின்றன, குறிப்பாக பாறை கிரகங்கள் மற்றும் நிலவுகள்.


டெக்டோனிக் அடுக்குகளும் வெப்பப் பகுதிகளும்

Picture
(OSR – Oceanic Spreading Ridges)
விலகிச்செல்லும் அடுக்கு எல்லைகள்மத்திய-கடல் முகடுகளில் இரண்டு டெக்டோனிக் அடுக்குகள்ஒன்றிலிருந்து ஒன்று விலகுகின்றன. வெப்பமான உருகிய பாறையால் உருவாகின்ற புதிய கடல் மேல்புறப்பகுதி மெதுவாக குளிர்ந்து கெட்டியாகிறது. டெக்டோனிக் அடுக்குகள் இழுப்பதன் காரணமாக மத்திய-கடல் முகடுகளில் உள்ள மேல்அடுக்கு மிகவும் மெலிதாக இருக்கிறது. மேல்அடுக்கு மெலிதாவதன் காரணமாக வெளிப்படும் அழுத்தம் வெப்பநிலை மாறாத நீட்டிப்பிற்கு வழிவகுக்கிறது, மெல்லிய அடுக்கின்ஒரு பகுதி உருகுவது எரிமலை நிகழ்விற்கும் புதிய கடல் மேல்அடுக்கு உருவாவதற்கும் காரணமாகிறது.பெரும்பாலான விலகல் அடுக்கு எல்லைகள் கடல்களுக்கு அடிப்பகுதியில் இருக்கின்றன, எனவே பெரும்பாலான எரிமலை நிகழ்வுகளும் கடலுக்கு கீழ்ப்புறம், புதிய கடல்தளத்தை உருவாக்குவதாக இருக்கின்றன. அதிவெப்ப துளைகள் அல்லது ஆழ்கடல் துளைகள் என்பவை இவ்வகையான எரிமலை நிகழ்விற்கான உதாரணமாகும்.மத்திய-கடல் முகடு கடல்மட்டத்திற்கு மேல்பகுதியில் இருக்குமிடத்தில் எரிமலைத் தீவுகள் உருவாகின்றன, உதாரணம்: ஐஸ்லாந்து.
விலகல் அடுக்கு எல்லைகள்ஒன்றன்மேல் ஒன்றுள்ள அடுக்குகள் என்பவை இரண்டு அடுக்குகள், வழக்கமாக கடல் அடுக்கு மற்றும் கன்ட அடுக்குகள் மோதிக்கொள்ளும் இடங்களாகும். இந்த நிகழ்வில், கடல் அடுக்கு ஒன்றன்மேல் ஒன்று அடுக்கப்படுவது, அல்லது கன்ட அடுக்கிற்கு கீழே ஒன்றோடு ஒன்று கலந்துவிடுவதால் கடற்கரைக்கு அருகாமையில் ஆழ்கடல் அகழி ஒன்றை உருவாக்கிவிடுகின்றன.ஒன்றன்மேல் ஒன்றுள்ள அடுக்கால் வெளியேற்றப்படும் தண்ணீர் மேல்பகுதியில் இருக்கும் மெல்லிய குறுக்கு அடுக்கின் உருகும் வெப்பநிலையைக் குறைத்துகற்குழம்புகளை (மக்மா) உருவாக்குகிறது.இந்த மாக்மாவானது அதனுடைய உச்சபட்ச அளவு சிலிக்கான் காரணமாக தொடர்ந்து மிகவும் பி்சுபிசுப்பாகவே இருப்பதால் மேல்பகுதியை எட்டாமலும் அடிப்பகுதியை குளிர்விக்காமலும் இருந்துவிடுகிறது.இது மேல்பகுதியை எட்டும்போது எரிமலை உருவாக்கப்படுகிறது.இந்தவகையான எரிமலைக்கு எட்னா எரிமலை மற்றும் பசிபிக் நெருப்பு வளையத்தில்உள்ள எரிமலைகளே வகைமாதிரி உதாரணங்களாகும்.